-36 பயணிகள் உயிரிழப்பு
தைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது.
திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாகச் சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர்.
தடம்புரண்ட ரெயிலுக்கு அருகில் லாரியின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லாரி மீது மோதியதால் ரெயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் ரெயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.