வரலாறு காணாத வெப்பம்

 டஜன் கணக்கானோர் கனடாவில் பலி

கனடா நாட்டில் எப்போதுமில்லாத வகையில் வெப்பம் பதிவாகியிருக்கிறது. அதிக  வெப்பத்தால் டஜன் கணக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அங்கு 49.5 பாகைக்கும்  மேலாக அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது.

இதற்கு முந்தைய வாரங்களில் அதிகபட்சமாக கனடாவில் 45 டிகிரி அளவில்தான் வெப்பம் பதிவானது.

இந்த வெப்பநிலை வயோதிகர்களுக்கும் உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் மோசமானதாக இருக்கிறது என்று வான்கூவர் புறநகர் பகுதி போலீஸ் கேப்டன் மைக் கலன்ஜ் தெரிவித்துள்ளார்.