ஜோகூர் மாநிலத்தில் முதல் கபடி அகாடமி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் அறிவிப்பு

ஜோகூர்பாரு, ஜூலை 29-

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான முதல் நிலை கபடிப் பயிற்றுநர் பயிலரங்கு  ஜோகூர் மாநிலத்தில் ஜோகூர்பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள  மலேசிய தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் விமரிங்யைாக நடைபெற்றது

ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்  இந்த கருத்தரங்கை அதிகார்வப்பூர்வமாக  திறப்பு  செய்து உரையாற்றினார்.

ஜோகூர் மாநிலத்தில் முதல் கபடி அகாடமி அமைய தமது ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டு.  அதற்கான  எல்லா ஏற்பாடுகளையும்  முயற்சியும் தாமே முன்னின்று ஙெ்ய்து கொண்டிருப்பதாக அவர் அறிவித்தார்.

மூன்று நாள் நடந்த இந்த கருத்தரங்கில் தழுவிய நிலையிலிருந்து வந்திருந்த பயிற்சியாசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து  கொண்டனர். சுமார் 40 பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கை  மலேசிய கபடி பயிற்றுனர் மு. பழனியாண்டி மிகவும் சிறப்பாக வழிநடத்தினார்.

இப்பயிலரங்கில் கலந்து கொண்ட  ஆசிரியர்கள்  தத்தம் மாநிலம் சென்ற பிறகு தனித் தனியே கபடிக்  குழு அமைத்து விளையாட்டாளர்களை உருவாக்குவதன் மூலம் அவர்களின் பயிற்சி மூலம் தேர்ச்சி அடைய வழி அமையும் என்று மலேசிய கபடி சங்கத் தலைவர்  சதாசிவம் கூறினார்.

இப்பயிலரங்கு பல சவால்களுக்கு மத்தியில் சமுக சிந்தனையோடு ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்து கொண்டு கபடி பயிற்றுனர் அந்தஸ்தைப் பெற்ற இவர்கள் தங்கள் முயற்சியைத் தொடங்கினாலே அதுவே இப்பயிலரங்குக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று பயிலரங்கின் ஏற்பாட்டாளரும்  ஜோகூர் மாநில கபடிச் சங்கத் தலைவருமான சந்திரன் முருகையா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here