தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் ங்பாய் ங்ட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ.

வரும் காலங்களில் தொழில்நுட்பம் தொடர்பானப் போட்டிகளை நடத்த தன்னால் முடிந்த உதவிகளை செய்ய இருப்பதாக அவர்தம் உரையில் கூறினார். தொடர்ந்து இன்றைய தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அவர்களிடம் இருக்கும் திறமையை தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் ஈடுபடுத்திக் கொண்டு மாணவர்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய நிகழ்விற்கு அழைத்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இப்போட்டியின் செலவில் ஒரு பகுதியாக 3,000  வெள்ளியை நன்கொடையாக வழங்கி, மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

பகாங் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி  27.7.2019 (சனிக்கிழமை) தேசிய வகை காராக் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரையாற்றிய 2019 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் குணசேகரன் கந்தசுவாமி கூறுகையில் இன்றைய போட்டிக்கு மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், இப்போட்டியில் மாணவர்கள் முதல் முறையாக புதிய தொழில்நுட்பக் கருவியை பயன்படுத்தி 50 கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதன் மூலம் மாணவர்கள் 50 புதிய தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களை கற்றுக்கொண்டனர். இதன் மூலம் திறன் சார்ந்த மாணவர்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும். தொடர்ந்து பகாங் மாநில நிலையிலான தகவல் தொடர்பு ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். பகாங் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள்.

திரானித்தா சுரியா தமிழரசீ – பெந்தோங் தமிழ்ப்பள்ளி, ராகவி ராஜேந்திரன் – பெந்தோங் தமிழ்ப்பள்ளி, திருப்பதி நாராயணங்ாமி – காராக் தமிழ்ப்பள்ளி, ஷாரு ஸ்ரீ ஜெயராஜ் – லாடாங் கெமாயான்,  கவினேஷ் ரமேஷ் – ஙெ்ல்புரோன் தமிழ்ப்பள்ளி, நர்மதா மகேஸன் – காராக் தமிழ்ப்பள்ளி, திருதமிழ் ஙெ்ல்வன் – கெமாயான் தமிழ்ப்பள்ளி  ங்ந்தோஷ் ராஜ் தமிழ் ஙெ்ல்வன் – கெமாயான் தமிழ்ப்பள்ளி,  உதயா ராமங்ந்திரன் – மெந்தகப் தமிழ்ப்பள்ளி, ங்ரவணதேவர் – காராக் தமிழ்ப்பள்ளி, தேவா காளிதாஸ் – மெந்தகப் தமிழ்ப்பள்ளி, ரிவாஷன் முரளி – தானா ராத்தா தமிழ்ப்பள்ளி.  பகாங் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற முதல் 12 நிலை வெற்றியாளர்கள் தேசிய நிலை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here