டைனோசர் முட்டைகளைக் கண்டெடுத்த 10 வயது சிறுவன்!

குவாங்டாங்,

சீனாவில் ஒரு சிறுவன் சமீபத்தில் ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது டைனோசர் முட்டைகளைக் கண்டான்.

10 வயதான ஜாங் யாங்ஷே ஒரு ‘வால்நட்’ தாணியத்தைத் திறப்பதற்குக் கருவிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு விசித்திரமான தோற்றமுடைய கல் இருப்பதைக் கண்டான். அதன் விசித்திரமான வடிவத்தினால் டைனோசர் முட்டையாக இருக்கலாம் என சந்தேகம் கொண்டான்.

சிறுவன் இது மாதிரி ஒன்றை அருங்காட்சியகத்தில் பார்த்ததாகத் தெரிவித்தான். பின்னர்,  உடனடியாக தனது அம்மாவான லி சியாஃபாங்கை கல்லை ஆய்வு செய்ய அழைத்தான். அது ஒரு டைனோசர் முட்டையாக இருக்கலாம் என்று அவரும் ஒப்புக்கொண்டார்.

அந்த கல் உண்மையில் ஒரு டைனோசர் முட்டை என்பதை அங்கு வந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் 10 டைனோசர் முட்டைகளைக்  கண்டு பிடித்தனர். 3.5 அங்குல நீல முட்டைகள் சுமார் 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்பது தெரியவந்தது.

டைனோசர் முட்டைகளின் வகையைத் தீர்மானிக்க கூடுதல் சோதனைகளை மேற்கொள்ள முட்டைகள் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பு ஹெயுவான் உள்ளூர் மக்களுக்கு ஆச்சரியமாக இருக்காது. ஏனெனில் இந்த நகரம் டைனோசர்களின் வீடு என்று அறியப்படுகிறது.

நெக்ஸ்ட்ஷார்க்கின் கூற்றுப்படி, 1996 முதல் ஹெயுவானில் இருந்து 17,000 க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் தொண்டப்பட்டுள்ளன.  இதன் விளைவாக அங்கே ஒரு டைனோசர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here