விரைவில் புதிய பல்நோக்கு மண்டபம் காணும்: முனைவர் டாக்டர் பழனி அறிவிப்பு.

நெகிரி செம்பிலான் இந்திய பட்டதாரிகள் சங்கத்தில் கல்வி பயிற்சி மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அச்சங்கத்தின் தலைவரும் தோற்று நருமான முனைவர் டாக்டர் பழனி முத்துசாமி கூறினார்.

இங்கு சிரம்பான்  நகராண்மைக் கழக மண்டபத்தில்நடை பெற்ற அச்சங்கத்தின் 15ஆவது குறிஞ்சி மலர் கலை நிகழ்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த அவர் இச்சங்கத்தின் கீழ் இயங்கும்கூட்டுறவுக் கழகம் மற்றும் அற வாரியம் மூலமாக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில்  சொந்தமான பல்நோக்கு மண்டபம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டத்தையும் சங்கம் விரைவில் தொடங்க விருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

கடந்த 1999 ஆண்டில் தோற்று விக்கப்பட்ட இப்பட்டதாரிகள் சங்கம், 2 மாணவர்களை கொண்டு லோபாக் தமிழ்ப்பள்ளியில் எஸ்டிபிஎம் கல்வி பயிற்சி வகுப்பை தொடங்கி இன்றோடு 20 ஆண்டுகளை கடந்துவிட்டது. இங்கு கல்வி பயிலும் மாணவர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டில் மாணவர்களின்    ஆற்றலை வெளிப்படுத்தும் குறிஞ்சி மலர் கலை நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொடங்கி,  இந்த ஆண்டோடு  15 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது என அவர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் இந்தியர் பட்டதாரிகள் சங்கம் இன்று பல பரிணாம வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கு இங்கு கல்வி பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டார். ஆரம்பம் மற்றும் இடைநிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தங்கள் கல்வியை முடித்த மாணவர்கள் மீண்டும் அங்கு திரும்பி போவது இல்லை.ஆனால், நெகிரி செம்பிலான் இந்திய பட்டதாரிகள் சங்கத்தில் கல்வி பயிற்சியை மேற்கொண்ட பிறகு, பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்த பின்னும், இச்சங்கத்திற்கு திரும்பி வந்து தங்கள் கல்வி சேவையை அடுத்த கட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்குகிறார்கள். இதுதான் எங்கள் கல்வி வெற்றியின் ரகசியம். அம்மாணவர்களின் எதிர்கால நலனுக்காக தொடங்கப்பட்டது தான் பட்டதாரிகள் கூட்டுறவு கழகமும், கல்வி அறவாரியமும் என பழனி வரிசைப்படுத்தினார்.

கடந்தாண்டு இக்கல்வி மையத்தில் எஸ்டிபிஎம் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டு வரும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்பாக இன்றைய குறிஞ்சிமலரில், பாடல் மற்றும் நாடகங்கள் மிக பிரமாண்டபமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க திரண்டு வந்திருந்த பெற்றோர், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை மாணவர்களின் படைப்பு வெகுவாகக் கவர்ந்திழுத் தது. மேலும் இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு பல்கலைக் கழகத் தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள விருக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுமார் 25 ஆயி ரம் வெள்ளி கல்வி ஊக்குவிப்பு தொகை வெகுமதியுடன் கல்வி நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதே விழாவில் இவ்வாண் டுக்கான சிறந்த பெற்றோர் விரு தும் வழங்கப்பட்டது. தங்களின் நான்கு பிள்ளைகளை பட்டதாரி களாக உருவாக்கி சாதனைப் படைத்த ஆரோக்கியசாமி – கேத்தரின் தம்பதியருக்கு அவ் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் சிறப்பு வருகை யாளர்களாக மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் ஜே.அருள்குமார், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப் பினர் பி.குணா, சங்க ஆலோசகர் கருப்பையா மற்றும் இளையோர் பட்டதாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here