நடிகரை போட்டு தாக்கிய தீபிகா

மோஷன் கேப்சர் அனிமேஷன் தொழில் நுட்பம் மூலம் உருவான கோச்சடை யான்  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டுமொரு தமிழ் படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் தனக்குள்ள குறையை வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதாவது தான் மன அழுத்தத்தால் (டிப்ரஷன்) பாதிக்கப்பட்டபோது அனுபவித்த வேதனைகளை அவர் தெரிவித்திருந்தார்.

ஏழை, பணக்காரன் என்று யாருக்கு வேண்டுமானாலும் மனஅழுத்தம் வரும். அதை மறைக்காமல் தகுந்த நேரத்தில் டாக்டரிடம் சொல்லி உதவி பெற வேண்டும். எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியுமே போராட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் மிகவும் அசதியாக உணர்வேன். மன அழுத்தம் ஏற்படுவது நம் கையில் இல்லை. பணம் புகழ் குடும்பம் என்று அனைத்தும் இருந்தால் மன அழுத்தம் ஏன் வரப்போகிறது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்டவர்களுக்கு தான் மன அழுத்தம் ஏற்படும் என்று நினைப்பது தவறு. சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் (சல்மான்கான்) தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். யாருக்கும் மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அதை வெளியில் சொல்வதில் தவறில்லை. ஆனால் அதை வெளியில் சொல்ல சிலர் பயப்படுகிறார்கள்’ என்றார் தீபிகா படுகோனே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here