உலகம் முழுவதும் பயணம் செய்ய எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், மொழி ஒரு தடையாக வந்து நம் முன் நிற்கும். அப்படியே பயணம் செய்தாலும் நாம் செல்லும் இடங்களில் இருக்கும் மனிதர்களுடன் உறவாட முதல் தடையாக இருப்பது மொழிதான். இப்போது அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துவிட்டது பாக்கெட் அளவில் உள்ள ஒரு டிரான்ஸ்லேட்டர்.

உலகம் சுற்றும் வாலிபர்களுக்காக பிரத்யேகமாக இதை வடிவமைத்திருக்கிறது ‘லாங்கோகோ’ நிறுவனம்.ஸ்மார்ட்போனை விட சிறிய அளவில் இருக்கும் இந்தக் கருவி தமிழ், இந்தி உட்பட 105 மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஒன்றிலிருந்து இன்னொரு மொழிக்கு உடனடியாக மொழி பெயர்த்துத் தருகிறது. வெறுமனே டெக்ஸ்ட்டாக மொழிபெயர்ப்பது மட்டுமல்லாமல் பேசியும் காட்டுகிறது.

உதாரணத்துக்கு, சென்னையில் இருந்து நீங்கள் பாரிஸுக்குப் போகிறீர்கள். அங்கே உள்ள பிரெஞ்சுக்காரரிடம் அங்குள்ள நல்ல லாட்ஜ், நல்ல உணவகம், சுற்றிப்பார்க்க உகந்த இடங்கள் பற்றிக் கேட்க வேண்டும். உங்களுக்குப் பிரெஞ்சு தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது. இருவருக்கும் பொதுவான ஆங்கிலமும் அரைகுறைதான். அப்போது இந்த டிரான்ஸ்லேட்டர் ஆபத்பாந்தவனாக உங்கள் முன் வந்து நிற்கும்.

ஆம்; நீங்கள் தமிழில் சொல்வதை அவருக்கு ஒரு வினாடியில் பிரெஞ்சில் மொழி பெயர்த்துத் தரும். இதே மாதிரி அவர் பிரெஞ்சில் பேசுவதை  தமிழில் மொழிபெயர்த்துத் தரும். தவிர, இதில் வை-பை வசதியும் இருக்கிறது. இதில் சிம் கார்டை பொருத்திவிட்டால் இணைய சேவையையும் பெறமுடியும். செயற்கை நுண்ணறி வின் மூலம் இயங்கும் இந்தக் கருவியில் பருவ நிலையைக் கூட நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

3.1  இன்ச் அளவிலுள்ள ரெட் டினா டிஸ்பிளேயில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தை களை வாசிப்பது பேரனுபவமாக இருக்கும். நாளுக்கு நாள் இது அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். அதனால் மொழி பெயர்ப்பின் போது உண்டாகும் சின்னச் சின்ன தவறுகள் காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும். ஆன்லைன் தளங் களில் கிடைக்கிறது இந்த பாக்கெட் டிரான்ஸ்லேட்டர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here