அமைச்சரவையைக் கலைத்து விடுங்கள் – ஸம்ரி வினோட்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – சில காலமாகவே மலேசிய மக்களை உச்ச கட்ட கோபத்தில் வைத்திருக்கும் ஒரே விவகாரம் “ஸாக்கிர் நாய்க்”. நிரந்தர குடியுரிமை அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஸக்கிரி நாய்க் அண்மையில் கிளாந்தானில் பிரச்சாரத்தில் பேசிய மலேசிய இந்துக்களின் விசுவாசம் மற்றும் சீனர்களை விருந்தாளிகள் எனும் கருத்து மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஸாக்கிர் நாய்க்கின் மாணவரும் பின்பற்றாளருமான ஸம்ரி விநோட் நேற்று தனது முகநூல் பக்கத்தில், மலேசியா இந்தியர்கள் மற்றும் சீனர்களால் சூழ-படுவதற்குள் ஆட்சியை கலையுங்கள். மலேசிய பிரதமரை போற்றுபவரை நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்கிறார்கள், ஆனால் மலேசியாவை அவமானப்படுத்துபவர்களை அமைச்சர்களாக்கியுள்ளீர்கள்.

இது மிகவும் விசித்திரமாக உள்ளது என கருத்து பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவினைக் கண்ட பல சமுக வலைத்தளவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து நேற்றைய அமைச்சரவையில் பேசப்பட்டு, முஸ்லிம் அல்லாதவர்களின் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஸாக்கிர் நாய்க் இனிமேல் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளக் கூடாது மற்றும் அவர் வெளியேற்றப்பட வேண்டும் எனம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இனிமேல் பிரதமர் மகாதீர் முடிவெடுக்கட்டும் என அமைச்சர் கோபிந்த் சிங், குலசேகரன், சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அமைச்சர் சாய்ட் சாடிக் மற்றும் முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திமும் இவ்விவகாரம் தொடர்பில் ஸாக்கிர் நாய்க் மலேசியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here