10 நாட்களாக காணமல் போன அயர்லாந்து நாட்டு பெண் நோராவின் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்தை அடுத்து, நேற்று காலை அந்த சடலம் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனை இன்னமும் முடியாத நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் நெகிரி செம்பிலான் போலிஸ் தலைமையகத்தில் பிரேத பரிசோதனையின் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 12 மணி நேரங்களுக்கு மேலாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு நேற்றிரவு 9.25 மணியளவில்தான் மருத்துவ நிபுணர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நோராவின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனால், அவை அனைத்துக்குமான பதில் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நோராவின் மரணம் குறித்து பேரரசரும் பேரரசியாரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், இந்த வழக்கில் போலிசார் அவர்களின் விசாரணையை முடிக்கும் வரை பொதுமக்கள் எந்த ஒரு யூகத்தையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்