12 வயது உறவுக்கார சகோதரியை கற்பழித்த 11 வயது சிறுவன்

சபா, ஆகஸ்ட்15 – 5 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்  தனது 12 வயது உறவுக்கார  சகோதரியை கற்பழித்துள்ள சம்பவம் பெனெம்பாங்கில் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, வீட்டின் படுக்கையறையில் இருவரும் உடல் உறவு வைத்துள்ளனர். இதனைக் கண்ட அச்சிறுமியின் அண்ணன், தாயிடம் தெரிவிக்க உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறுநாள் பிற்பகல் 12 மணியளவில் அச்சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அந்தச் சிறுவன் இதற்கு முன் அச்சிறுமியிடம் 4 முறை உடல் உறவு வைத்துள்ளதை ஒப்புக் கொண்டதாக பெனெம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹரிஸ் இப்ராகிம் தெரிவித்தார்.

இதற்கிடையில், அச்சிறுவன் கைப்பேசியில் தகாத வீடியோக்களை பார்த்து, அவ்வாறு நடந்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளான். அடுத்த கட்ட விசாரணைக்காக அச்சிறுவன் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 376 கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here