மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி, பாரதிராஜா இயக்குவதாக அறிவித்தனர். கங்கனா ரனாவத் நடிக்க தலைவி பெயரில் விஜய்யும், நித்யா மேனன் நடிக்க ஐயர்ன் லேடி பெயரில் பிரியதர்ஷனியும் இயக்குகின்றனர். பாரதிராஜா இப்படம் பற்றிய விவரம் எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுபற்றி தலைவி பட தலைவி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாய லேஷ் ஆர்.சிங் கூறும்போது,’ஒரு தயாரிப்பாளராக ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்காக நான் ஒருபோதும் வித்யாபாலனை நடிக்க கேட்டு அணுக வில்லை. இப்படியொரு தகவல் வெளியானது எனக்கும் தெரியும்.
ஆனால் இப்படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் என்னிடம் கதையை கூறும்போதே கங்கனாதான் ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டேன். எனவே நானும் சரி, கதாசிரியரும் சரி கங்கனாவை தவிர வேறு யாரையும் நடிக்க கேட்டு அணுகவில்லை. வேறு யாராவது கால்ஷீட் கேட்டு வித்யாபாலனை அணுகினார்களா என்பது எனக்கு தெரியாது. பட குழுவுடன் இணைந்த நாங்கள் அனைவரும் கங்கனாவை ஜெயலலிதாவாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்தோம்.’ என்றார்.