மலாக்கா
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 3 உறவினர்களைக் கொன்ற ஆடவருக்கு உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை விதித்தது.
மேலும், லுக்மான் ஹாடி முஸ்தாபா (வயது 31) எனும் ஆடவர் இரண்டு சகோதரிகளைக் கொல்ல முயன்றதற்காக அவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிபதி அகமட் நாஸ்பி யாடின் உத்தரவிட்டார். அந்த இரு சிறைத் தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
லுக்மானின் வளர்ப்புத் தாயாரான மரியா பஹாரிம்(வயது 61), மரியாவின் கணவரான ஹசான் ஏ.வஹாப்(வயது 70) மற்றும் மரியாவின் மகனான முகமட் தவ்பீக் ஹசான் (வயது 22) ஆகியோரை 2016 ஆகஸ்டு 25இல், 5.50லிருந்து 6.15 மணி வரை பெர்தாம் மாலிம், ஜாலான் சீடாங் எனும் வீட்டில் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
மரியாவின் மகள்களான நூர் ஹச்லிண்டா டியானா ஹசான்(வயது 26) மற்றும் நூர் அக்கேடா ஆயினா ஹசான்(வயது 24) என்பவரையும் கொலை செய்ய முயன்றதாக லுக்மான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கில் 25 சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்