கோலாலம்பூர்
இந்திய நாட்டைச் சேர்ந்த ஸாக்கிர் நாயக் ஒரு பிரிவினைவாதி, மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என முன்னாள் தூதர் டென்னிஸ் இக்நேஷியஸ் குறிப்பிட்டார்.
பல காலமாக ஸாக்கிர் பிரிவினை வாதமாகப் பேசி வருவதை நான் சுட்டிக்காட்டி வந்துளேன். அதன் காரணமாகவே என்னையும் சேர்த்து நால்வர் மீது அவர், போலீசில் புகார் செய்துள்ளார்.
நாட்டின் பொறுப்பான குடிமகன், கட்டுரையாசிரியர் எனும் பொறுப்பில் இருக்கும் எனக்குத் தேசிய பிரச்சினைகள் மீது கருத்தைச் சொல்த அனைத்துச் சுதந்திரம் உள்ளது. 36 ஆண்டுகளாக அரசின் பொறுப்பிலும் தூதராகவும் இருந்த எனக்கு ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம், நாட்டின் விவகாரங்களைப் பற்றிப் பேசும் உரிமையும் கடமையும் உள்ளது.
ஸாக்கிரின் உரைகள், அறிக்கைகள் யாவும் மக்களிடையே பிரிவினையையும் இனங்களுக்கிடையே மோதலையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாகும். அதன் அடிப்படையில் மற்றவர்களுடன் நானும் சேர்ந்து ஸாக்கிர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
பல முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக் கணக்கான நாட்டுப் பிரஜைகள், எல்லா இனத்தவர்களையும் சார்ந்தவர்கள், சமயத்தவர்களும் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்நியர் ஒருவர் எங்கள் மீது குறை கூறுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஸாக்கிரின் புகார் பற்றித் தம்மிடம் போலீசார் விசாரித்தால், அதற்கு முழு ஒத்துழைப்பையும் தர தயாராக இருப்பதாக டென்னிஸ் இக்நேஷியஸ் தெரிவித்தார்.