கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி!

ஸ்டாக்ஹோம்

அமெரிக்காவுக்காக ஆர்டிக் தீவான கிரன்லாந்தை  வாங்கலாமா என அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து  கிரீன்லாந்து விற்பனைக்கு  இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டதாக  கிரீன்லாந்து இருந்தாலும் தனி பிரதமர், தனி நாடாளுமன்றம் என தன்னாட்சி அதிகாரத்துடன் உள்ளது.

வட அமெரிக்கக் கண்டத்தில் வடக்கு அட்லாண்டிக் கடலுக்கு இடையில் அமைந்துள்ள மிகப் பெரிய அழகிய தீவு இது. பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ள இந்த தீவு இயற்கைக் தாதுக்கள் நிரம்பியது.

அங்கே 57 ஆயிரம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். மொத்தம் 7.72 லட்சம் சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்கலாம் என  ஆலோசகர்களுடன்  அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனையடுத்து கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என அறிவிப்பு வெளியானது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here