பெட்டாலிங் ஜெயா
சீனக் கல்வி சார்பு இயக்கமான டோங் ஸோங்கை தடை செய்ய அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டுமென பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி சைனுல் அபிடின் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர், மலேசியா என்பது மலாய்காரர்களுக்கே எனும் கருத்தைச் சொல்லி பல தரபாரின் கண்டனத்துக்கும் அஸ்ரி ஆளானார்.
பிரிபூமி இளைஞர் பிரிவின் தலைவர் முஸாமில் இஸ்மாயில், டோங் ஸோங்கை தடை செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவு தரும்படி தம்மைக் கேட்டதாக அஸ்ரி தெரிவித்தார்.
அந்தத் திட்டத்திற்கு தமது ஆதரவை முழு மனதோடு அளிப்பதாகவும் கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்தி அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜாவி-அரேபிய சித்திர எழுத்தை தாய்மொழிப்பள்ளிகளில் நான்காம் வகுப்பில் அறிமுகப்படுத்தும் அரசின் திட்டத்தை டோங் ஸோங் கடுமையாக எதிர்த்த காரணத்தினால், அதனை தடை செய்ய வேண்டுமென்ற அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது.