பேங்காக்
சிறையில் இருக்கும் காதலனுக்காக சொந்த தாயைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
இக்கொடூர சம்பவம் பேங்காக் தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது. காஞ்சனா ஸ்ரீசுங்( வயது 25 ) எனும் அப்பெண் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட காதலனை விடுவிக்க, தாயைக் கொன்று அவரின் காப்புறுதி பணத்திற்காக இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமானது.
அப்பெண் தாயைச் சுட்டு கொல்வதற்காக 200,000 பாட் (RM27,023) பணம் கொடுத்து இரு ஆடவர்களை நாடியுள்ளார். கடந்த ஜூன் 22 -இல் அப்பெண்ணின் தாயார் உவமேடுவேன் ஸ்ரீசுங்(வயது 55 ) சைக்கிளில் வீடு திரும்புகையில் அந்த ஆடவர்களால் சுடப்பட்டு ஒரு மாதம் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
அதன் பின்னரே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே போலீசார் அந்த இரு ஆடவர்களையும் கைது செய்து விசாரித்ததில் காஞ்சனாதான் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
குற்ற விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.