கோலாலம்பூர்
குடிபோதையில் காரில் இருந்த ஆடவர், இறந்த விட்டதாக நினைக்கும் அளவுக்குச் சென்றுள்ளார்.
காலை 8 மணியளவில் ஆடவர் ஒருவர், தமது பெரோடுவா ஆக்சியா காரை, பெட்ரோல் நிறுத்திய பின்னர், காரில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதனைக் கண்ட பொதுமக்கள், அவருக்கு ஏதோ ஆகிவிட்டதாக நம்பி சந்தேகத்தோடு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தகவல் கிடைத்த கோலாலபூர் தீயணைப்பு இலாகாவின் 7 வீரர்கள் அங்கு விரைந்து பார்த்தபோது, அந்த ஆடவர் அசைவற்று இருந்ததைக் கண்டு காரின் கதவைத் திறக்க முயன்றனர்.
சத்தத்தைக் கேட்ட அந்த ஆடவர், திடீரென எழுந்து கதவைத் திறந்துள்ளார். அந்த ஆடவர் மது போதையில் நினைவற்று இருந்ததாகவும் அவர் மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.