அடுத்தடுத்த தீவிரவாத தாக்குதல்களால் ஆடிப்போயிருக்கும் ஆப்கானிஸ்தான்; மீண்டும் தலை தூக்கும் தீவிரவாதம்

காபூல்

அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்களால் மீண்டும் ஆடிப்போயிருக்கிறது ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரும் களம் இறங்கியுள்ளதால் திருமண மண்டபம், மருத்துவமனை என தாக்குதல் கலாச்சாரம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. பாமியன் என்ற இடத்தில் நின்ற நிலையில் உலகின் மிக உயரமான புத்தர் சிலையை தாலிபன் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர்.

2001-ம் ஆண்டு இச்சிலைகள் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காபூல் மியூசியமும் சூறையாடப்பட்டு புத்தர் சிலைகள் உள்ளிட்ட பழமையான பொருட்களும் கீழே போட்டு உடைக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளிலேயே புத்தர் சிலைகளை சீனா அமைத்து ஒளி ஒளி காட்சிகளையும் ஏற்பாடு செய்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு காபூல் மியூசியத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கின்றன.

உடைந்து போன புத்தர் சிலைகளின் பாகங்களை சேர்க்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இச்சிலைகள் பழங்கால பொருட்கள் தானே தவிர வழிபடும் விக்ரகங்கள் அல்ல என்பை உணர்ந்து இவற்றை பாதுகாக்க தாலிபான்கள் உதவ வேண்டும் என்று மியூசியத்தின் இயக்குனர் கூறுகிறார்.

சீனா மற்றும் பாகிஸ்தானை எல்லையாக கொண்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெற்றது. அதன்பிறகு அமெரிக்க தலைமையிலான நாட்டோ படைகள் முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயக ஆட்சி அமைந்திருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா வெளியேற வேண்டும் என்பதில் ஆப்கானியர்கள் உறுதியுடன் இருப்பதால் தாலிபன் இயக்கும் மீண்டும் தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here