உலக ரோபோ மாநாடு :-மூளை அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ரோபோ!

பெய்ஜிங்

சீனாவில் மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ ஒன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் -சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ரோபோ மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் அண்மையில் தொடங்கியது.

ஒரு புதிய சகாப்தத்தில் நுண்ணறிவு சூழல் அமைப்பு என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு வருகிற 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உளவு,மருத்துவம் ,பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழில் துறைகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ,ஆபத்து காலங்களில் உதவும் நன்மை கொண்ட நாய் ரோபோ, பியானோ வாசிக்கும் ரோபோ ,பார்களில் மது வினியோகம் ரோபோ, குழந்தைகளிடம் தோழமை பாராட்டி விளையாடும் ரோபோ, அரைக்கிலோ எடையுடன் 20 நிமிடங்கள் பறக்கக் கூடிய பறவை ரோபோ, நீரில் நீந்தும் மீன் ரோபோ உள்ளிட்ட ரோபோக்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here