சென்னை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக வெளியேறியவர் காமெடி நடிகை மதுமிதா. அவர் சக போட்டியாளர்களுடன் எழுந்த பேச்சு வார்த்தை சண்டையில் தற்கொலை செய்ய முயன்றதே காரணம் என சொல்லப்பட்டது.
அதே வேளையில் அவர் கத்தியால் கையை அறுத்துக்கொண்ட போது கஸ்தூரி மற்றும் சேரன் இருவரும் தான் காப்பாற்றியுள்ளனர். மதுமிதாவின் இந்த நடவடிக்கை நிகழ்ச்சியின் விதி மீறலாக இருந்தது.
இதுகுறித்து கமல்ஹாசனும் கவலை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மதுமிதா மீது டிவி சானல் நிகழ்ச்சி குழு புகார் போலிசில் புகார் அளித்துள்ளது.
இதில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பே ரூ 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். பின்னர் மீதமுள்ள ஒவ்வொரு நாளும் 80 ஆயிரம் என்ற கணக்கில் 42 நாட்களுக்கான பணத்தை திரும்பி தருவதாக நிகழ்ச்சி குழு கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு போனில் வாட்ஸ் வாய்ஸ் மெசேஜ் மூலம் இரண்டு நாட்களில் பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விட்டுள்ளாராம். எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுவது மதுமிதாவுக்கு வேலையாக போய்விட்டது.