மூன்றாவது முறையாக புக்கிட் அமானுக்குச் சென்ற ஸாக்கிர் நாய்க்

கோலாலம்பூர்

மனிதவள அமைச்சர் குலசேகரன் மீது தொடுத்த வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க் மூன்றாவது முறையாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்குச்ஹ் சென்றுள்ளார்.

ஆகஸ்ட் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அந்த புகாரில் தம்மை இழிவுப்படுத்தி பேசிய பேச்சை குலா மீட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று மதிய 3.40 மணிக்கு தனது வழக்கறிஞருடன் வந்திருந்த ஸாக்கிர் நாய்க்கை அங்கிருந்த சுமார் 30 பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்தனர்.

ஆகஸ்ட் 16ஆம் திகதி குலாவிற்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பிய ஸாக்கிர் அதில், 3 வருடங்களுக்கு முன்பு “Zakir Naik’s presence in Malaysia is embarrassing to all Malaysians” எனும் தலைப்பில் குலா வெளியிட்ட செய்திக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் மேலும் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

குலாவின் அந்த செய்தி, தம்மை ஒரு நியாயமற்றவர் போல சித்தரிப்பதாகவும், தன்னலத்திற்காக இஸ்லாத்தை தவறாக பயன்படுத்துவது போலும்  காட்டிவிட்டது என ஸாக்கிர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையில், வழக்கறிஞர் நோட்டிஸ் குறித்து பேசிய குலா “ தாம் மன்னிப்புக் கேட்க போவதில்லை நஷ்ட ஈடும் வழங்கப்பபோவதில்லை. ஸாக்கிரை நீதிமன்றத்தில் சந்திக்க தயார்” என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here