மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு

சென்னை

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இலங்கை அமைச்சர் பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்-இலங்கை நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் மு.க.ஸ்டாலினிடம் தனது மகளின் திருமண அழைப்பிதழை அளித்தார். இந்த சந்திப்பின் போது திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் எம்.பி, ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பிக்கு பின்னர் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்-இலங்கை நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயக நாட்டில் எந்த அரசாக இருந்தாலும் சரி. எல்லா இனங்களையும் சமத்துவமாக நடத்துகின்ற தார்மீக பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை மீறாமல் தற்போதைய பாஜக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here