ஸாக்கிர் விவகாரம் : மகாதீரின் முடிவை ஆதரிக்கிறேன் அன்வார்

பெட்டாலிங் 

ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது எனும் துன் மகாதீரின் முடிவை தாம் ஆதரிப்பதாக பிகேஆரின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் உறுப்புக் கட்சித் தலைவர்களே ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென நெருக்குதல் கொடுத்தாலும் தாம் மகாதீரை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

மகாதீரின் முடிவானது யாருடைய நெருக்குதலுக்கும் அடிபணிந்தோ அல்லது சமரசம் செய்து கொண்டோ எடுக்கப்பட்ட முடிவு இல்லையெனவும் அது மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அன்வார் தெரிவித்தார்.

இனி அவர் சமய உரைகளை நிகழ்த்துவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும், ஸாக்கிர் ஆவேசகமாகப் பேசி இன உணர்வுகளைத் தூண்டக் கூடியவராக இருந்தாலும், அவர் யாரையும் நிந்திக்கும் நோக்கம் கொண்டவர் அல்ல என ஸாக்கிரை அவர் தற்காத்துப் பேசினார்.

கிளாந்தானில் பேசிய அவர், இந்தியர்களின் மீதான விசுவாசத்தையும் விருந்தினர்களாக வந்திருக்கும் சீனர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதை அடுத்து, அவர் மீது பல தரப்பாரின் கண்டனத்துக்கும் ஆளானார்.

அவரின் பேச்சினை பினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, ஜசெக சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் இக்நேசியஸ் ஆகியோர் கடுமையாக விமர்ச்சித்துள்னர்.

அவர்கள் அனைவரும் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஸாக்கிர் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும், பின்னர் தமது சமய உரைக்காக மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிட்டருந்தார். அந்த மன்னிப்பை அவர் மீதான வழக்கை விசாரிக்கும் புலனாய்வாளரளிடம் தெரிவித்தால் மட்டும் போதுமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here