கோ ஜேக்கை மலேசியாவில் பயன்படுத்தலாம்- பாதுகாப்பு முக்கியம்

ஜகார்த்தா

இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் பயன்பாட்டில் இருக்கும் கோ ஜேக் எனப்படும் மோட்டார் சைக்கிள் போக்குவரத்தை மலேசியாவிலும் பயன்படுத்தலாம் என இந்தோனேசியாவுக்கான மலேசிய தூதர் ஸைனால் அபிடின் பாக்கார் தெரிவித்தார்.

கோஜேக் பயன்படுத்துவதற்கு சுலபமானது இயல்பானது ஆனாலும், அதில் பயணிப்போரின் பாதுகாப்பில் முக்கியத்துவம் காட்டப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அதில் சம்பந்தப்பட்டுள்ள விபத்து மற்றும் காப்புறுதி போன்றவற்றில் முக்கிய கவனம் தேவை.

நேற்று, மலேசியன் டாக்சி நிறுவன தோற்றுநர் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்பட்டுவரும் கோ ஜேக்கை இழிவாகப் பேசியதை எதிர்த்து, இந்தோனேசியாவில் உள்ள மலேசிய தூதரகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அங்கு அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, சம்சுஹாரின் இஸ்மாயில் தமது கூற்றுக்கு இந்தோனேசிய கோ ஜெக்குகள், பயனீட்டாளர் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here