வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து இந்திய ஆடவர் பலி !

கோலகங்சார்

கோலகங்சார் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் 256.1 ஆவது கிலோ மீட்டர் மெரோரா சுரங்கப்பாதைக்குப் பிறகு நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் இந்திய ஆடவர் பலியாகிய வேளை 33 வயது சீன ஆடவர் ஒருவரும் 32 வயது சீன மாது ஒருவரும் கடுமையான காயத்திற்கு உள்ளாகினர்.

இன்று பிற்பகல் 12.10 மணியளவில் சிறு கற்களை ஏற்றிவந்த டிரேலர் லோரி மற்றும் Toyota land cruiser வாகனம் இரண்டும் விபத்துக்குள்ளானதாக  தீயணைப்பு இலாகாவிற்கு தகவல் கிடைத்ததாக அதன் அதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு அதிகாரிகள் செல்வதற்குள் விபத்தில் சிக்கிய இருவரை பொது மக்கள் மீட்டதாகவும், இந்த விபத்தினால் இருபக்க நெடுஞ்சாலையிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை நெரிசல் ஏற்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதில் சிக்கிய 32 வயது மதிப்புதக்க இந்தியரான லித்திஸ்குமார்  சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இறந்துவிட்டதாக அங்கு வந்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அவரின் சடலம் சவபரிசோதனைக்காக  போலீசார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

Toyota land cruiserரை பின்பகுதியில் மோதிய டிரேலர் பின்பு இரண்டு வாகனமும் கட்டுபாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here