விநாயகர் சதுர்த்திக்கு கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தின் தங்கத் தேர் ஊர்வலம்

கோலாலம்பூர்

எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் தங்கத் தேர் ஊர்வலம் வரவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்திற்குப் பிறகு இரவு மணி 7.30 மணியளவில் விநாயகப் பெருமான் தங்கத் தேர் ஏறி நகர் ஊர்வலம் வரவுள்ளார்.

தங்க விநாயகரை சுமந்து தங்கத் தேர், ஜாலான் துன் பேராக் வழியாக தாய்க்கோயிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை அடைந்து, சிறப்பு வழிபாட்டிற்குப்பின், ஜாலான் சுல்தான் மற்றும் ஜாலான் ஹங் கஸ்தூரி வழியாக ஜாலான் துன் சம்பந்தனிர்க்குச் சென்று, ஜாலான் பாடாங் பெலியா வழியாக ஜாலான் ஸ்காட்டை வந்தடையும். அங்கிருந்து ஜாலான் சுல்தான் அப்துல் சமாட் வழியாக பிரிஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வந்தடையும்.

அங்கிருந்து மீண்டும் ஜாலான் துன் சம்பந்தன் வழியாக சுமார் அதிகாலை 1.00
மணியளவில் கோட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தை வந்தடையும்.இதனை முன்னிட்டு, தங்க தேருக்கு வழிவிடும் வகையிலும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் வகையிலும் புடு சென்ட்ரல் வழி சாலை தொடங்கி ஜாலான் புடு லாமா வரை ஞாயிறு மதியம் முதல் சாலை மூடப்படும்.

இந்த இரண்டு நாள் உற்சவத்தில் 10,000 -திற்கும் மேலான பக்தர்கள்
கலந்துக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் நலனை
கருத்தில் கொண்டு ஏராளமான தண்ணீர் பந்தல்களும் அன்னதான பந்தல்களும்
நிறுவப்படும்.

நெரிசலைக் குறைத்து எல்லா பக்தர்களும் அமைதியாக வழிபாடு செய்ய உதவும் வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் நின்று, ஒரு நேரத்தில் 100 பக்தர்கள் மட்டும் கோயிலின் உள்ளே வழிபாடு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள், அர்ச்சனை சீட்டை வரிசையில்
நிற்கும் முன்பே பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதே வேளை தங்க உற்சவ மூர்த்தி தங்கத் தேரில் அமர்ந்து திங்கற்கிழமை மாலை வரை
அருள் பாலிப்பார். அங்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்யலாம். அதற்கான
அர்ச்சனை சீட்டுகளை தங்கத் தேரின் அருகில் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here