33 மாணவர்கள் பாதிப்புற்ற சம்பவம் – கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வந்த துர்நாற்றம் .

பாசீர் கூடாங்,

ஜொகூர் பாசீர் கூடாங் பகுதியில் வீசிய துர்நாற்றத்தினால் மயக்கம் வாந்தி வந்து பாதிப்புற்ற தாமான் பாசீர் பூத்தே தேசிய பள்ளி மாணவர்கள் 33 சம்பவத்தின் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த துர்நாற்றம் அருகாமையில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வந்தவை என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சுற்றுச்சூழல் துறை மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட காற்றுத் தூய்மையின் அளவு அந்த பள்ளி பகுதியில் இயல்பு நிலையைக் காட்டுவதாக மாநில உள்ளாட்சி, நகர நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் டான் சென் சூன் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாசிர் கூடாங் நகராண்மைக் கழகத்திடம் பணிக்கப்பட்டிருப்பதாகவும் காற்றின் தர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here