எனது கல்வி கொள்கையை பிரதிபலிக்கிறது “ராட்சசி” தமிழ்திரைப்படம் – மஸ்லி மாலிக்

கோலாலம்பூர்

அண்மையில் இயக்குனர் கெளதம்ராஜ் இயக்கத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்து வெளிவந்த “ராட்சசி” திரைப்படம் பலரின் பாராட்டைப் பெற்றிருந்தது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்.

இப்படத்தைப் பார்த்த நமது கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அத்திரைப்படத்தை தான் தமது அதிகாரிகளுடன் பார்த்ததாகவும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் எனவும் தனது  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் கதை வித்தியாசமாக இருக்கிறது என்றும் அதில் நடித்த கதாபாத்திரங்கள் நன்று நடித்திருந்தாகவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்ப்பதற்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு பாகமும் நம் நாட்டின் கல்வி நிலையைக் காட்டியது. ஜோதிகாவின் கீதா ராணி கதாபாத்திரம் ஒரு வீரமான கதாபத்திரத்தைக் காட்டுகிறது. பெரிய மாற்றங்களை கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது கீதா ராணியின் கதாபத்திரம் காட்டுகிறது.

நம் நாட்டின் கல்விக் கொள்கையில் கொண்டு வர முயலும் பல விஷயங்களை இப்படம் எடுத்துக் காட்டியது. எடுத்துக்காட்டாக மாணவர்களுக்கான இலவச உணவுத் திட்டம். இது வெறுமனே உணவுத் திட்டம் மட்டுமல்ல. மாறாக மாணர்களுடன் ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் ஒரு சூழலை ஏற்படுத்துவதே எனது ஆசையாகும். அது இப்படத்தில் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது.

அதே போலத்தான் மாணவர்கள பள்ளியிலிருந்து விடுபடும் பிரச்சனை மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு என அனைத்தும் ஏறியாக காண்பிக்கப்பட்டுள்ளது இப்படத்தில்.

அனைவரின் கனவாக கல்வியை ஆக்குவது என்பது எனது லட்சியம். கல்வியால் மட்டுமே நமது வாழ்க்கைத் தரம் முன்னேறும் என்பதை நான் பெரிதும் நம்புகிறேன்.

ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here