உழைப்பதற்கு முன்வரத் தயங்கும் மலாய்காரர்கள் – மகாதீர்.

கோலாலம்பூர்

மலாய்காரர்கள் அசுத்தமான, கடினமான, ஆபத்தான வேலைகளைப் புறக்கணித்ததால் அன்று சீனர்களும் இந்தியர்களும் அதில் ஈடுபட்டு கடின உழைப்பையும் போட்டு பொருளாதாரத்திலும் மேம்பட்டனர்.

இவர்கள் நெல்வயல்கள், மீன்பிடி மற்றும் அரசாங்கத்தில் சாதாரண குமாஸ்தா வேலைகளில் மட்டும் ஆர்வம் காட்டினர். இன்றும் மலாய்க்காரர்களின் போக்கு மாறிவில்லை என தமது ‘செடெட்’ அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் துன் மகாதீர்.

உழைப்பதற்குத் தயங்குவதால் இன்று ஏழு மில்லியன் அந்நிய நாட்டவர்கள் இங்கு இருக்கின்றனர். கடுமையான உழைப்பால் அவர்களும் மலாய்க்காரர்களைவிட அதிகமாக சம்பாதிக்கின்றனர். இவர்கள் ஏழையாகவே வாழ்கின்றனர்.

உழைப்பதற்கு முன்வராமல் பிறரின் வெற்றியைப் பார்த்து கோபப்படுவது பிரச்சனையைத் தீர்க்காது. சிலர் மலாய்க்காரர்கள் தான் இந்நாட்டுக்கு எஜமானார்கள் என்கின்றனர். ஏழைகளாக, திறமையற்றவர்களாக, பிறரின் தயவை எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பின் அதில் என்ன பெருமை என பிரதமர் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here