கைப்பேசி பயணர்கள் கண்காணிக்கப்படும் அபாயம்!

கோலாலம்பூர்

கைப்பேசி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைக்கள் கண்காணிக்கப் படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

சீன கண்டுபிடிப்பான சாவோ எனும் மென்பொருளைக் கொண்டு வீடியோவில் காணப்படும் ஒருவரின் முகத்தை மாற்றி, வேறோருவரின் முகத்தைப் பதிய வைக்கும் புதிய தொழில்நுட்பம் வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் நிறையவே சங்கடங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆகஸ்டு 30இல் தொடங்கபட்ட அந்தத் தொழில்நுட்பம் சீனாவில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

அதில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், அதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் சாவோ மென்பொருள் அதனை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் உரிமை இருப்பதாக சாவோவின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கைப்பேசி இணைய பயணர்கள் எந்தவொரு புதிய மென்பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்னர், அதன் ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், ஒப்புக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here