மணமகளை வரவேற்க போம்பா வீரரின் விபரீத ஸ்டண்ட்

கோலாலம்பூர்

தாம் மணக்கப் போகும் மணமகளை வரவேற்க தீயணைப்பு வீரர் ஒருவர் ஸ்டண்ட் யாரும் செய்யத் துணியாத சாகசத்தைச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

முகமட் அஸ்ரி அஸிஸ் (வயது 24) என்பவர் தாம் மணக்கப் போகும் நோர்டியானா நடிரா ஸைனுடின்(21) என்பவரை வரவேற்க, கட்டடத்தின் மேலிருந்து தொங்கியபடி சாகசம் செய்து காட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாருக்கும் தொல்லை கொடுக்காமல், அந்தத் தீயணைப்பு நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வீடியோ படம் எடுக்கப்பட்டது.

இந்த விபரீத திட்டத்தை தாங்கள் இருவரும் பேசி முடிவெடுத்து செயல்படுத்தியதாக வும், தங்களின் திருமணம் அடுத்தாண்டில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் நோர்டியானா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here