உலக கிண்ணத்தில் பங்குப்பெற மலேசியாவின் வாய்ப்பு? ஆவலுடன் மலேசியர்கள்

கோலாலம்பூர்

உலக கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா UAEயிடம் 2-1 கோல் கணக்கில் தோல்விக் கண்டது.

2022 ஆண்டு உலக கிண்ணத்தில் மலேசியா இடம்பெற மலேசியாவுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என மலேசியர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்த வேளை, புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைப்பெற்ற G பிரிவின் நேற்றைய ஆட்டத்தில் மலேசியா தோல்விக் கண்டது சற்று சோர்வை தந்துள்ளது எனலாம்.

இருப்பினும், இந்தோனேசியாவுடனான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 3-2 என மலேசியா வென்றது. இம்முறை உலக கிண்ணத்திற்கு தகுதி பெறும் என உற்சாகத்தை இது கூட்டியது.

அடுத்ததாக G பிரிவின் தாய்லாந்து மற்றும் வியட்னாம் அணிகளுடன்  மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நிச்சயம் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயம் மலேசியாவுக்கு ஏற்பட்டுள்ளது எனலாம்
நேற்று தாய்லாந்து இந்தோனேசியாவுடன் மோதியதில் தாய்லாந்து 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here