ஜோர்ஜ்டவுன்
தன்னை நிந்தனையாக பேசியதாக கூறி அமைச்சர் குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி உட்பட மேலும் மூவர் மீது சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க் போலிஸ் வழக்கு தொடர்ந்தடஹி தொடர்ந்து, புக்கிட் அமான் அதன் விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.
அதன் முதல் கட்டமாக, இன்று காலை பினாங்கு ஜோர்ஜ்டவுனில் உள்ள கொம்தாரில் இராமசாமிடமும், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
புக்கிட் அமானைச் சேர்ந்த இரு போலிஸ் அதிகாரிகள் காலை 9 மணியளவில் அங்கு சேர்ந்த வேளை, சத்திஸ் 9.02 மணியளவிலும் இராமசாமி 9.15 மணியளவில் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.