தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு இந்தி படங்களில் நடிக்கச் சென்றவர் ஸ்ரீதேவி.
அவரது திடீர் மறைவுக்கு பின்னர் மகள் ஜான்வி நடிகை ஆனார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வியை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜான்வியின் தந்தையும், நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருமான போனிகபூரிடம் கேட்டபோது,’தென்னிந்திய படங்களை எங்கள் குடும்பமே விரும்பி பார்க்கும்.
ஸ்ரீதேவி இங்கு நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இங்குள்ள நடிகர்களுடன் நாங்கள் நல்ல உறவுடன் இருக்கிறோம். ஜான்வி தென்னிந்திய படங்களை ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார். ஆனால் அதற்கு நல்ல ஸ்கிரிப்ட் அமைய வேண்டும். அந்த தருணத்துக்காக காத்திருக்கிேறாம். ஆனால் இதுவரை அப்படியொரு ஸ்கிரிப்ட் அவருக்கு கிடைக்கவில்லை. தென்னிந்திய படங்களை ஜான்வி நிராகரிக்கிறார் என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை’ என்றார் போனிகபூர்.