ஆடம்பரமான நட்சத்திர ஓட்டல்களில் சொகுசாக தங்குகிறோம் என்று பெருமையாக சில நட்சத்திரங்கள் சொல்லிக்கொள்கின்றனர். சில சமயம் அங்கு அதிர்ச்சியான அனுபங்களை சந்திக்கின்றனர்.
விஸ்வரூபம் படத்தில் நடித்த வில்லனாக நடித்த நடிகர் ராகுல் போஸ் இரண்டு வாழைப்பழத்துக்கு சுமார் 442 ரூபாய் பில் தரப்படத்தை கண்டு ஷாக் ஆனார். தற்போது உணவில் புழு இருந்ததாக தமிழ் நடிகை பயமுறுத்தியிருக்கிறார்.
கில்லாடி, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நிலா. சிம்ரனின் ஜிராக்ஸ் என்று வர்ணிக்கப்படும் இவரது ஒரிஜினல் பெயர் மீரா சோப்ரா. பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் வழங்கப் பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நிலா கூறும்போது,’குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கியிருக்கிறேன்.
ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தேன். அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற ஓட்டல்களில் தங்கி, அதிக வாடகையை கொடுக்கிறோம். ஆனால், அவர்கள் புழுக்களைக் கொண்ட உணவைத் தருகிறார்கள். நான் இங்கு வந்ததில் இருந்து நோயால் பாதிக்கப்பட்டேன். அதற்கான காரணம் இப்போதுதான் தெரிந்தது. இதை வெளிப்படுத்தவே சமூக வலைத் தளத்தில் வெளியிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.