ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு.

சென்னை – தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவிகத்துள்ளது.

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை தலைமை இயக்குனர் திரு.ஜ.கு.திரிபாதி, அவர்கள் அனைத்து காவலர்களும் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார். டிஜிபியின் உத்தரவின் பேரில், சிறப்பு வாகன சோதனையானது, 14.09.2019 மற்றும் 15.09.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. இவ்வாகன சோதனையானது தமிழகம் முழுவதும்(வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மண்டலங்கள் மற்றும் நகர காவல் நிலையங்கள்) நடைபெற்றது. இவ்வாகன சோதனையில் பதியப்பட்ட வழக்குகளின் விவரம் பின்வருமாறு,

* வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற சோதனையின்போது

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 25,278 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாத 6,921 பேர் மீதும், மருந்தி அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய 2 பேர் மீதும், குட்கா சட்டத்தின்படி 9 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற சோதனையின்போது

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 22,931 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாத 7,160 பேர் மீதும், மருந்தி அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒருவர் மீதும், குட்கா சட்டத்தின்படி 8 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* மத்திய மண்டலத்தில் நடைபெற்ற சோதனையின்போது

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 21,862 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாத 7,255 பேர் மீதும், மருந்தி அருந்துவிட்டு வாகனம் 11 பேர் மீதும், குட்கா சட்டத்தின்படி 366 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற சோதனையின்போது

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 24,396 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாத 9,472 பேர் மீதும், மருந்தி அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய 5 பேர் மீதும், குட்கா சட்டத்தின்படி 25 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* மாநகராட்களில் நடைபெற்ற சோதனையின்போது

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 24,128 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாத 6,488 பேர் மீதும், மருந்தி அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய 7 பேர் மீதும், குட்கா சட்டத்தின்படி 131 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றதாக மொத்தம் 1,18,018 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாத குற்றத்திற்காக மொத்தம் 36,835 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக மொத்தம் 28 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. மேலும், குட்கா சட்டத்தின் கீழ் மொத்தம் 542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here