புத்ராஜெயா- புத்ராஜெயா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எஸ்பிஆர்எம்) கொள்கை, திட்டமிடல், ஆய்வுப் பிரிவு துணை இயக்குநர் கருணாநிதி சுப்பையா, சபா மாநில எஸ்பிஆர்எம் இயக்குநராக நேற்று பதவியேற்றார்.
இந்தியர் ஒருவர் மாநில எஸ்பிஆர்எம் இயக்குநராகப் பதவி ஏற்றிருப்பது இதுவே முதல் முறை – புதிய வரலாறும்கூட.இதுநாள் வரை சபா மாநில எஸ்பிஆர்எம் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த டத்தோ சஸாலி சல்வி நேற்று பதவி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் பதவி ஒப்படைப்புச் சடங்கு சபா மாநில எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் மிகவும் சுமுகமாக நடந்தேறியது.கருணாநிதியின் இந்நியமனம் இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.
பி.ஆர்.ராஜன்