Home தொழில்நுட்பம் இந்தியாவில் நாளை அறிமுகமாகிறது Mi ஸ்மார்ட் பேண்ட் 4

இந்தியாவில் நாளை அறிமுகமாகிறது Mi ஸ்மார்ட் பேண்ட் 4

xiaomi தனது ஸ்மார்ட்டர் லிவிங் 2020 நிகழ்ச்சியில் Mi ஸ்மார்ட் பேண்ட் 4-ஐ நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. சியோமியின் முந்தைய ஃபிட்னஸ் டிராக்கர்கள் சிறந்த அம்சங்களை குறைந்த விலையில் வழங்கியதால் அதிக பிரபலமாகின. சியோமியின் Mi பேண்ட் 4 ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டது. புதிய Mi பேண்ட் 4 மாடலில் 0.95 இன்ச் கலர் AMOLED தொடுதிரை டிஸ்ப்ளே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் வழங்கப்பட்டிருக்கிறது.

இதை கொண்டு சைக்லிங், உடற்பயிற்சி, ஓட்ட பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.இந்த ஸ்மார்ட் பேண்ட் 4 – ன் விலை தற்போது லீக் ஆகியுள்ளது. அதன்படி, மி ஸ்மார்ட் பேண்ட் 4 விலை ரூ.2,499 விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிகாரபூர்வ விலை இன்னும் தெரியவில்லை. முந்தைய mi பேண்ட்களில் பெரும்பாலானவை இந்தியாவில் ரூ.1,999 விலையுடன் தொடங்கப்பட்டன, இதேபோல் mi ஸ்மார்ட் பேண்ட் 4ம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதில் 65 இன்ச் Mi டி.வி. மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய டி.வி. சியோமியின் முதல் பெரிய மாடல் டி.வி. ஆகும். இதுதவிர இந்தியாவில் ரெட்மி டி.வி. அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version