இலங்கையில் மீண்டும் ராஜபஷ குடும்பத்தின் ஆதிக்கம்!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் இன்று என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.

தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றார் சஜித் பிரேமதாச.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here