தஞ்சோங் பியாய்: வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்!

Osai News

கோலாலம்பூர்

கடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றிப் பெற்ற தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் இன்று திங்கட்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இது குறித்து தமது முகநூலில் பதிவிட்ட மசீச தலைவர் வீ கா சியோங், ஜெக் செங் பதவி உறுதிமொழியின் போது எந்தவொரு அமைச்சர்களும் மக்களவையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான கர்மெய்ன் சர்டினி 10,380 வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது

சுமார் 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் வீ ஜெக் செங் அபார வெற்றிப் பெற்றார். இம்முடிவானது, நம்பிக்கைக் கூட்டணியின் மற்றும் பிரதமர் மகாதீர் மீது மக்கள் அதிருப்திக் கொண்டுள்ளதை பிரதிபலிப்பதாக பலர் கருத்துரைத்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்துநடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here