Tesco School Shop 2019-மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

கெப்போங்,

கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. தங்கும் இடம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகள் போல்தான் கல்வியும். கல்வி என்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மட்டும் பிரகாசமாக்கவில்லை. மாறாக பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மலேசியா வளம் பெறுவதற்குரிய மனித ஆற்றலை உருவாக்கும் ஒரு முக்கியப் பங்கையும் ஆற்றுகிறது.ஒரு குழந்தைக்கு கல்வி வழங்க வேண்டிய அவசியம் – முக்கியத்துவம் குறித்து அதிகமாகவே பேசப்படுகிறது . ஆனால், அக்குழந்தையைப் படிக்க வைப்பதற்கு ஒரு குடும்பம் எதிர்நோக்கும் குடும்பச் சுமையைப் பற்றி யாரும் விவாதிப்பது இல்லை.

கல்வி என்பது ஒரு குடும்பத்தின் மிகப்பெரிய செலவாக இருப்பதை AIA Group காப்புறுதி நிறுவனம் ஓர் ஆய்வின் வழி தெளிவாகக் கண்டறிந்துள்ளது.

Tesco Malaysia Product இயக்குநர் கென்னத் சுவா (நடுவில்) PINTAR அறவாரியத்தின் அறங்காவல் சப்ரி அப்துல் ரஹ்மான், PINTAR அறவாரியத் தலைமை நிர்வாக அதிகாரி கரிமா டான் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து Beg Terus Senyum திட்டத்தை அறிமுகம் செய்கிறார்.

ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, பல்கலைக்கழகம் என்று ஒரு பிள்ளை மிகப்பெரிய செலவுகளோடுதான் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வருகிறது. கல்வியில் எதுவும் மலிவு கிடையாது.

பள்ளிக் கட்டணம், ஆண்டுதோறும் பள்ளிச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், தளவாடப் பொருட்கள், பள்ளிச் சுற்றுப்பயணங்கள், டியூஷன் கட்டணம் என்று ஒரு குடும்பம் அடுக்கடுக்கான நிதிச் சுமைகளைச் சுமக்க வேண்டியுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் கூடுதலான பிள்ளைகள் பள்ளிக்குச் ஙெ்ல்லும் நிலையில் அந்த நிதிச்சுமை நினைத்துப் பார்க்க முடியாத எல்லையைத் தொடுகிறது.
இதனை நினைவில் கொண்டு Tesco Stores (M) Sdn. Bhd மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் பிரசாரத்தை தொடங்கியது.

சப்ரி அப்துல் ரஹ்மான் (இடமிருந்து 4ஆவது), கென்னத் சுவா (நடுவில்), தாமான் மீடா 2 தேசிய ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் (வலமிருந்து 4ஆவது) முகமட் ஃசா சாலே, யுனிலீவர் மலேசியா வாடிக்கையாளர் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் ஜெய் கோ (வலமிருந்து 3ஆவது), கரிமா டான் அப்துல்லா (வலமிருந்து 2ஆவது) 2019 Tesco School Shop யுனிலீவர் பள்ளிக்குப் போவோம் நிதி ஆகியவற்றைத் தொடக்கி வைத்தபோது…

பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் திட்டமான Tesco School Shop திட்டத்தை Tesco முன்னெடுத்துள்ளது. ஒரு பிள்ளைக்கு பள்ளிச் சீருடைகள், 3 ஜோடி காலுறைகள், ஒரு ஜோடி காலணி இவை அனைத்தும் 40 வெள்ளிக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது என்று Tesco Product Directer, Kenneth Chua தெரிவித்தார்.Tesco School Shop திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான அரைக்கை சட்டை மற்றும் பிளவ்ஸ் 50 விழுக்காட்டுக் கழிவில் 7.00 வெள்ளிக்கும் குறைவாகவே விற்கப்படுகிறது. பிரச்சாரக் காலம் முழுமைக்கும் இந்த விலையில் பெற்றோர் சீருடைகளை வாங்கலாம்.

டுரோலி பேக் 32.90 வெள்ளி, லஞ்ச் பாக்ஸ், வாட்டர் போத்தல் 5 வெள்ளி என்றும் தளவாடப் பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள், ஃபோஸ்டர்கள் 50 விழுக்காட்டுக் கழிவில் விற்கப்படுகின்றன.

Tesco School Shop பிரச்சார இயக்கம் 2019, நவம்பர் 14 முதல் 2020, ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெறும்.தன்னுடயை கார்ப்பரேட் சமூகக் கடப்பாட்டின் (CSR) கீழ் பி 40 பிரிவு பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் Beg Terus Senyum திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

Tesco Malaysia Product இயக்குநர் கென்னத் சுவா (நடுவில்) PINTAR அறவாரியத்தின் அறங்காவல் சப்ரி அப்துல் ரஹ்மான், PINTAR அறவாரியத் தலைமை நிர்வாக அதிகாரி கரிமா டான் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து Beg Terus Senyum திட்டத்தை அறிமுகம் செய்கிறார்.

இந்த Beg Terus Senyum (புன்னகையை மலர வைக்கும் புத்தகப் பை) பிரச்சாரம் 2019, நவம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை அமலில் இருக்கும். PINTAR (பிந்தார்) அறவாரியத்துடன் Tesco School Adoption Programe (தெஸ்கோ பள்ளி தத்தெடுப்புத் திட்டம்) பங்காளித்துவத்தை 2016ஆம் ஆண்டு முதல் ஆக்கப்பூர்வமாக அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தன்னுடைய ஸ்டோர்கள், பட்டுவாடா மையங்கள், தலைமையகம் சுற்றுப்பகுதிகளில் உள்ள 63 வசதி குறைந்த பள்ளிகளை (57,000 மாணவர்கள்) Tesco தத்தெடுத்துள்ளது.

2016ஆம் ஆண்டில் இருந்து இந்தத் தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கல்வித் திட்டம், சுகாதாரம், சத்துணவு விழிப்புணர்வு, சுற்றுச்சுழல் திட்டங்களுக்கு 45 லட்சம் வெள்ளி செலவு செய்யப்பட்டுள்ளது. தத்தெடுக்கப்பட்டிருக்கும் பள்ளிகளில் செய்யப்படும் ஒவ்வொரு காசு முதலீடும் நம்முடைய குழந்தைகள் மீதான முதலீடு – நாட்டின் எதிர்காலத்தின் முதலீடு என்றே Tesco நம்புகிறது என்று சுவா குறிப்பிட்டார்.
வசதி குறைந்த பி40 பிரிவு பிள்ளைகளின் முகங்களில் சிரிப்பைக் கொண்டு வரும் வகையில் 52.80 வெள்ளி செலவில் பள்ளிக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கிட முடியும்.

Tesco கெப்போங், Tesco எக்ஸ்ட்ரா செராஸ், Tesco ஷா ஆலம்,
Tesco ஸ்டேஷன் 18, Tesco எக்ஸ்ட்ரா பினாங்கு, Tesco அலோர்ஸ்டார், Tesco கோத்தாபாரு, Tesco சிரம்பான் ஜெயா, Tesco மலாக்கா ஙெ்ன்ட்ரல், Tesco ஸ்ரீ அலாம் ஆகியவற்றில் பேக் வாங்குவோம் சிரிப்பைக் கொண்டு வருவோம் பிரச்சாரம் தொடங் கியிருக்கிறது.

விரைந்து வாருங்கள், வசதியற்ற பிள்ளைகளின் முகங்களில்   சிரிப்பை மலரச் செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here