புத்ராஜெயா, டிங். 3-
பல இன மக்களைக் கொண்ட நாடாக இருப்பதால் மலேசியா வளர்ச்சியடையாமல் போய்விட்டது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறுகிறார்.
சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் மிகவும் வளர்ச்சியடைந்து இருக்கின்றன. அதற்குக் காரணம் அங்கு பல இன மக்கள் இல்லை.
ஒரே இனத்து மக்களாக இருப்பதால் அந்த நாடுகள் நாளுக்கு நாள் மேம்பாடு கண்டு வருகின்றன. ஆனால், மலேசியாவில் ஒவ்வோர் இனத்தின் வளர்ச்சியும் ஒரே அளவாக இல்லை. ஓர் இனம் மிகவும் முன்னேறி இருக்கிறது. இன்னோர் இனம் மிகவும் பின்தங்கி இருக்கிறது.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி இன்னும் அதிகமாகப் போனால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள்போல் இங்கும் வெடிக்கலாம். இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று தமது அமைச்சின் பணியாளர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் கூறினார்.