அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு விவகாரம் : பல அமைச்சுகளின் முடிவுக்குட்பட்டது

ஈப்போ –

உணவகங்கள் உட்பட மேலும் சில தொழில் துறை சார்ந்த அந்நிய நாட்டுத் தொழிலாளர் களை தருவிப்பது மனித வளத்துறை அமைச்சு மட்டுமே சம்பந்தப்பட்ட விவகாரமல்ல என்பதனை சம்பந்தப்பட்ட தொழில்துறைகளைச் சார்ந்தவர் கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என மனித வள அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

உணவகங்களில் வேலை ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. இதற்கு மனிதவள அமைச்சர் என்ற வகையில் உங்களது உதவியை பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்களே அதற்கு உங்களது நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கு அமைச்சர் எம். குலசேகரன் விளக்கமளித்தார்.

தொழிலாளர்கள் பிரச்சினைக்கு என்னை மட்டுமே சிலர் குறி வைத்து விமர்சனங்களை செய்து வருகின்றனர். அவர்கள் மீது தவறு சொல்ல நான் விரும்பவில்லை. காரணம் சில அடிப்படை அரசு கட்டமைப்பு முறை விளங்காத நிலையிலும் சரியான புரிதல் இல்லாததாலும் மனிதவள அமைச்சு அந்நிய நாட்டுத் தொழிலாளர்களின் தருவிப்பினை முடிவு செய்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறாகும்.

உள்நாட்டு வாணிபப் பயனீட்டாளர் நலத்துறை அமைச்சு, உள்துறை அமைச்சு எனப் மேலும் சில அமைச்சுகள் இந்த விவகாரத்தில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டிய அமைச்சர், சம்பந்தப்பட்ட தொழில் துறை சார்ந்த முதலாளிகளின் கோரிக்கைகளாக விளங்கும் வேலை ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மனிதவள அமைச்சு எந்த விதத்திலும் தடையாக இல்லை என்பதனை பலர் உணர்ந்துள்ளார்கள். சிலர் அதனை உணராமல் என்னையும் எனது அமைச்சகத்தையும் குறை கூறி விமர்சிப்பது வேதனையை தருகிறது என குலசேகரன் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here