அந்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க – டாப்ஸி

யு டர்ன் படத்தின் இந்தி ரீமேக் கில் நடிக்க நேரமில்லை என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2, ஆரம்பம் உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. தெலுங்கிலும் நடித்து வந்த அவர், இப்போது இந்தி படங்களில் பிஸி. அவர் நடித்த பங்க், நாம் ஷபானா, ஜூத்வா 2 உட்பட சில படங்கள் அவரைக் கவனிக்க வைத்தன.

இதையடுத்து சுமார் அரை டஜன் இந்திப் படங்களில் நடித்து வரும் அவர், நிற்க நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறார். இவர் இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதையில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இது இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் டாப்ஸி நடிப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது மறுத்தார். தனக்கு நேரமில்லாததால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here