தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிட கட்சிகளையே சேரும்: குருமூர்த்தி

கோவை –

தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிட கட்சிகளையே சேரும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துப் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் இருந்து ஊடுருவி வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே வகுப்புவாதம் என்றார்.

மேலும், தனி நாடு, தனிக்கொடி கேட்ட திராவிட கட்சியினர், தமிழ் மொழியை அழித்து விட்டார்கள் எனவும், தமிழை அழித்த பெருமை திராவிட கட்சிகளுக்கே சேருமென்று சாடிய அவர், தமிழகத்தில் தேசியம், தெய்வீகம், ஆன்மிகத்திற்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றும் வரை, துக்ளக் இதழின் சேவை இருக்கும் என்றும் குருமூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன், நாடு பிரிவினை யின்போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களுக்கு, 60 ஆண்டுகளுக்கு முன்பே குடியுரிமை வழங்கியிருந்தால் தற்போது பிரச்சினை வந்திருக்காது என்றார்.

மேலும் இத்தனை ஆண்டுகளாக செய்ய தவறியதை பிரதமர் மோடி நிறைவேற்றி, பரிகாரம் செய்துள்ளதாகவும் இல. கணேசன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here