கோலாலம்பூர் –
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா படுகொலைச் சம்பவத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கும் அவரின் துணைவியார் ரோஸ்மாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தால் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறினார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக புதிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. போதுமான ஆதாரங்கள் இருக்குமென்றால் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார் மொகிதீன்.
கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அல்தான்துயா மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டு அது வெடிக்கப்பட்டதால் உடல் முற்றாகச் சிதறிப்போனது.
இந்தக் கொலை தொடர்பாக காவல்துறை அதிரடிப் படையைச் சேர்ந்த அஸிலா ஹட்ரி, சிருல் அஸஹார் ஆகியோருக்கு 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிருல் அஸஹார் தப்பிச்சென்று ஆஸ்திரேலியாவில் நுழைந்தபோது கைதுசெய்யப்பட்டார். அஸிலா தற்போது காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் நஜிப் உத்தரவின் பேரில் அல்தான்துயாவைக் கொலை செய்ததாக அஸிலா வெளியிட்டிருக்கும் சத்தியப்பிரமாண வாக்குமூலம் வர்த்தகர் தீபன் ஜெய்கிஷன் வெளியிட்ட வீடியோ, சிருல் அஸஹாரின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றைப் பார்க்கையில் அல்தான்துயா படுகொலை வழக்கை மீண்டும் திறப்பதற்கான போதுமான அடிப்படை ஆதாரம் இருப்பதாக மொகிதீன் தெரிவித்தார்.
இந்தப் படுகொலையில் நஜிப்பிற்கும் அவரின் துணைவியாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மொகிதீன் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிருல் அஸஹார் தப்பிச்சென்று ஆஸ்திரேலியாவில் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அஸிலா தற்போது காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நஜிப் உத்தரவின் பேரில் அல்தான்துயாவைக் கொலை செய்ததாக அஸிலா வெளியிட்டிருக்கும் சத்தியப்பிரமாண வாக்குமூலம் வர்த்தகர் தீபன் ஜெய் கிஷன் வெளியிட்ட வீடியோ, சிருல் அஸஹாரின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றைப் பார்க்கையில் அல்தான்துயா படுகொலை வழக்கை மீண்டும் திறப்பதற்கான போதுமான அடிப்படை ஆதாரம் இருப்பதாக மொகிதீன் தெரிவித்தார்.
இந்தப் படுகொலையில் நஜிப்பிற்கும் அவரின் துணைவியாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மொகிதீன் தெரி வித்தார்.