சாமிவேலுவுக்கு எதிரான வழக்கில் என்னையும் சேர்க்க வேண்டும்!

கோலாலம்பூர் –

மஇகா முன்னாள் தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலுவின் மன நலம் குறித்து தீர்மானிக்க மருத்துவ விசாரணை நடத்தக் கோரி அவருடைய மகன் டத்தோஸ்ரீ எஸ். வேள்பாரி செய்து கொண்ட வழக்கு மனு மீதான விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

துன் சாமிவேலுவின் மனைவி எனக் கூறிக்கொண்ட மிரியாம் ரோஸ்லின் என்பவர் இந்த வழக்கு மனுவில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேள்பாரி தாக்கல் செய்துள்ள வழக்கு மனுவில் ரோஸ்லினும் ஒரு தரப்பாக தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்துள்ளதால் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமட் பாஷேர் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அனுமதித்திருக்கிறார் என்று ரோஸ்லின் வழக்கறிஞர் ஆர்.எஸ்.என். ராயர் நீதிமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஈப்போ உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இன்னொரு வழக்கில் துன் சாமிவேலுவும் வேள்பாரியும் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் தலையிடுவதற்கு ரோஸ்லினுக்கு உரிமை உள்ளது என ராயர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை எங்களுக்கும் விளைவைக் கொண்டு வரும் என்பதால் இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள மனு செய்வதற்கு ரோஸ்லினுக்கு உரிமை உள்ளது என்றார் அவர்.
வழக்கு விசாரணைக்கான தேதியை அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனுவை மிரியாம் தாக்கல் செய்துள்ளார். அவரும் நேற்று நீதிமன்றம் வந்திருந்தார்.
என்னுடைய கணவரை சந்திக்கவும் நீதி கிடைக்கவும் நான் நீதிமன்றம் வந்தேன் என்று ரோஸ்லின் நிருபர்களிடம் கூறினார்.

எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் சாமிவேலு குடும்பத்தில் ஒருவராக என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரி ரோஸ்லின் கடந்த ஆகஸ்டு மாதம் சாமிவேலு, அவருடைய மகன் வேள்பாரிக்கு எதிராக வழக்கு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

வேள்பாரி உட்பட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் சாமிவேலுவைச் சந்திப்பதற்கு முழு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரோஸ்லின் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
20017ஆம் ஆண்டு தொடங்கி சாமிவேலுவின் நிதிக் கட்டுப்பாட்டை வேள்பாரி எடுத்துக் கொண்டதாகவும் நிதி விவகாரத்தில் அவருடைய அதிகாரத்தை எல்லாம் எடுத்துக் கொண்டதாகவும் ரோஸ்லின் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் தனக்கு வரவேண்டிய 25ஆயிரம் வெள்ளி ஜீவனாம்சத் தொகையை வேள்பாரி நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமக்கு ஆயுள் கால ஜீவனாம்சமாக 2 கோடி வெள்ளி வழங்க வேண்டும் என்றும் ரோஸ்லின் கோரியிருக்கிறார்.

சாமிவேலுவின் மன நிலை குறித்து தீர்மானிக்க மன நலச் சட்டம் பிரிவு 52 கீழ் மருத்துவ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வேள்பாரி வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஈராண்டுகளுக்கு முன்பு நரம்புத் தளர்ச்சி காரணமாக சாமிவேலுவின் சுய நினைவு பாதிக்கப்பட்டிருக்கிறது எனவும் அவருக்கு எதிரான இரண்டு வழக்குகளில் அவர் தன்னை தற்காத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை எனவும் வேள்பாரி அந்த வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ரோஸ்லின் வழக்கறிஞர் ஆர்.எஸ்.என். ராயர் நீதிமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் தெரிவித்தார். ஈப்போ உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இன்னொரு வழக்கில் துன் சாமிவேலுவும் வேள் பாரியும் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் தலையிடுவதற்கு ரோஸ்லினுக்கு உரிமை உள்ளது என ராயர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை எங்களுக்கும் விளைவைக் கொண்டு வரும் என்பதால் இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள மனு செய்வதற்கு ரோஸ்லினுக்கு உரிமை உள்ளது என்றார் அவர்.
வழக்கு விசாரணைக்கான தேதியை அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனுவை மிரியாம் தாக்கல் செய்துள்ளார். அவரும் நேற்று நீதிமன்றம் வந்திருந்தார்.

என்னுடைய கணவரை சந்திக்கவும் நீதி கிடைக்கவும் நான் நீதிமன்றம் வந்தேன் என்று ரோஸ்லின் நிருபர்களிடம் கூறினார். எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் சாமிவேலு குடும்பத்தில் ஒருவராக என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரி ரோஸ்லின் கடந்த ஆகஸ்டு மாதம் சாமிவேலு, அவருடைய மகன் வேள்பாரிக்கு எதிராக வழக்கு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

வேள்பாரி உட்பட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் சாமிவேலுவைச் சந்திப்பதற்கு முழு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரோஸ்லின் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார். 20017ஆம் ஆண்டு தொடங்கி சாமிவேலுவின் நிதிக் கட்டுப்பாட்டை வேள்பாரி எடுத்துக் கொண்டதாகவும் நிதி விவகாரத்தில் அவருடைய அதிகாரத்தை எல்லாம் எடுத்துக் கொண்டதாகவும் ரோஸ்லின் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் தனக்கு வரவேண்டிய 25ஆயிரம் வெள்ளி ஜீவனாம்சத் தொகையை வேள்பாரி நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமக்கு ஆயுள் கால ஜீவனாம்சமாக 2 கோடி வெள்ளி வழங்க வேண்டும் என்றும் ரோஸ்லின் கோரியிருக்கிறார். சாமிவேலுவின் மன நிலை குறித்து தீர்மானிக்க மன நலச் சட்டம் பிரிவு 52 கீழ் மருத்துவ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வேள்பாரி வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஈராண்டுகளுக்கு முன்பு நரம்புத் தளர்ச்சி காரணமாக சாமிவேலுவின் சுய நினைவு பாதிக்கப்பட்டிருக்கிறது எனவும் அவருக்கு எதிரான இரண்டு வழக்குகளில் அவர் தன்னை தற்காத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை எனவும் வேள்பாரி அந்த வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here