காப்பகக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தெஸ்கோ குழுமம்

கிள்ளான் –

சமூக அக்கறை கொண்ட தெஸ்கோ மலேசியா (Tesco Malaysia) பேரங்காடி குழுமம் அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிள்ளான், சவுத் பார்க் பகுதியில் உள்ள ஜிஎஸ்எச் (Good Samaritan Home) காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்வில் விருந்தோம்பல் மட்டுமன்றி அச்சிறுவர்களுக்கிடையே விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. மேலும் அவர்களுக்கு தெஸ்கோ குழுமம் சார்பில் பெருநாள் அன்பளிப்புகளும் தினசரி தேவைப்படும் பொருட்களும் வழங்கப்பட்டன.
தெஸ்கோ குழும தலைமையகம் மற்றும் கிள்ளான் கிளையைச் சேர்ந்த 20 ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தி குழந்தைகளை மகிழ்வித்தனர்.

1999ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தற்பொழுது 7 மாதம் தொடங்கி 18 வயது வரையிலான 35 பிள்ளைகள் உள்ளனர். பாதிரியார் ஆல்பர்ட் ஒங் மற்றும் அவரின் துணைவியார் வை.எம்.ஓங் ஆகிய இருவரும் இந்த காப்பகத்தை வழிநடத்தி வருகின்றனர்.

மகிழ்ச்சி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உணர்வாகும். அதனை முன் வைத்து தெஸ்கோ குழுமம் இந்த காப்பக குழந்தைகளுக்கு பெருநாள் காலக்கட்டத்தில் முடிந்த அளவில் மகிழ்ச்சி வழங்க முற்பட்டுள்ளோம். அதே சமயம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இத்தம்பதியினர் ஆற்றிவரும் உதவி அளப்பறியது என தெஸ்கோ குழுமத்தின் பொதுச்சேவை பிரிவு இயக்குநர் அஸ்லிஸா அஸ்மேல் தெரிவித்தார்.
தொடர்ந்து, இக்குழந்தைகளின் நலன் கருதி தெஸ்கோ குழுமம் இந்த உதவியை செய்துள்ளது. பண்டிகை காலக்கட்டத்தில் இது போன்ற உதவி இக்குழந்தைகளுக்கு பெரு மகிழ்ச்சியை தரும் என காப்பக காப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here