தனுஷ் நடித்து கடந்த வருடம் அசுரன், எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. இதில் அசுரன் படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தனுஷ் நடிப்புக்கு பாராட் டுகளும் கிடைத்தன.
அசுரன் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்கின்றனர். அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்துள்ள பட்டாஸ் படம் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்து பா.ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் வெற்றிப் படத்தை டைரக்டு செய்து பிரபலமான மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதாகவும் எஸ். தாணு தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்தப் படத்துக்கு ‘கர்ணன்’ என்று பெயர் வைத்து இருப்பதாக தாணு சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.